Tamilnadu Rains : மேல்மருவத்தூரை மூழ்கடித்த வெள்ளம்.. தவிக்கும் கோவில் நிர்வாகம்...

By Ganesh RamachandranFirst Published Nov 28, 2021, 5:09 AM IST
Highlights

உலகப்பிகழ் பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் கோவில் நிர்வாகம் செய்வதறியாமல் தவித்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூர் பகுதிகளில் தலா 18 செ.மீ., காஞ்சிபரம் மாவட்டம் கட்டப்பாக்கத்தில் 17 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குனறத்தில் 16 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ரெட் அலர்ட் பகுதியில் உள்ளன.

சென்னைக்கு அருகே உள்ள மிக முக்கிய வழிபாட்டுத் தலமான மேல்மருத்தூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. இங்கும் அதி கனமழை பெய்து வருகிறது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் மழை காரணமாக கடுமையான வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக கோவில் கருவரை பரையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கோவிலின் பல இடங்களில் பக்தர்கள் அன்றாடம் வழிபடும் புற்றுக்கோவிலக்ளும் உள்ளன என்பதால் உடனடியாக இதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவில் நிர்வாகம் இதனை சீர்படுத்த  முயற்சித்தாலும் வெள்ளம் வடியாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக செயல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகின்றனர்.

click me!