தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தென் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டி இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தேனி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
undefined
நாளை (ஜனவரி 3) தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும், வருகிற 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்’ என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.