இளைஞர்களே...! தமிழக காவல்துறையில் 9006 பணியிடங்களுக்கான மெகா அறிவிப்பு ..! முந்துங்கள்

Published : Dec 19, 2018, 05:10 PM ISTUpdated : Dec 19, 2018, 05:29 PM IST
இளைஞர்களே...! தமிழக காவல்துறையில் 9006 பணியிடங்களுக்கான மெகா அறிவிப்பு ..! முந்துங்கள்

சுருக்கம்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்காக 9006 பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என தமிழ்நாடு காவல்துறை தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்காக 9006 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என தமிழ்நாடு காவல்துறை தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

தமிழக காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்கள் குறித்து தெரிவித்து உள்ளது.அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள், அதாவது கான்ஸ்டபிள். இதில் பெண்களுக்கு 2515 இடங்களும் ஆண்களுக்கு 6084 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று காலியாக உள்ள ஜெயில் வார்டர் பணியிடத்திற்காக, ஆண்களுக்கு 190 இடங்களும், பெண்களுக்கு 22 இடங்களும் ஆக மொத்தம் 212 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பயர்மேன் பணிக்காக, ஆண்களுக்கு 195 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 6469 போஸ்ட் ஆண்களுக்கும் 2537 போஸ்ட் பெண்களுக்கும் என மொத்தம் 9006 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது தமிழக காவல துறை. காவல் துறையில் சேர்வதற்கு ஆர்வமாக  உள்ள, படித்து முடித்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு  இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் 9006 காலி பணியிடங்களை நிரப்ப அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?