Shankar Jiwal: தமிழக அரசு அதிரடி; புதிய டிஜிபியாக பதவியேற்கிறார் சங்கர் ஜிவால்!

Ansgar R |  
Published : Jun 29, 2023, 08:18 PM ISTUpdated : Jun 30, 2023, 08:26 AM IST
Shankar Jiwal: தமிழக அரசு அதிரடி; புதிய டிஜிபியாக பதவியேற்கிறார் சங்கர் ஜிவால்!

சுருக்கம்

தமிழக அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், தமிழத்தின் புதிய டிஜிபியாக பதவியேற்கிறார் சங்கர் ஜிவால்

தமிழகத்தில் முக்கிய உயர் பதவிகளில் இருந்து வரும் இரு அதிகாரிகளின் பணிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசியலில் முக்கியமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டின் டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்களின் பனிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் அடுத்தபடியாக டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே நிலவி வந்தது. அதன்படி தற்பொழுது புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் புதிய டிஜிபி நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

ஆபாஷ் குமார், சீமா அகர்வால், ஏ.கே விஸ்வநாதன் மற்றும் சங்கர் ஜிவால் உள்ளிட்டவரின் பெயர் இடம் பெற்றிருந்தது பட்டியலை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க தற்போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்கவுள்ள டிஜிபி சங்கர் ஜுவால், நாளை வெள்ளிக்கிழமை (30.06.2023) மதியம் 1.30 மணியளவில் சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்