பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

Published : Sep 16, 2018, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

சுருக்கம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. காஞ்சிபுரம், செவிலிமேடு, வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் 3 மணிநேரம் விடாமல் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடானது. 

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.சிவகாசியில் 13 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?