
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 4-ந்தேதி காலை 7 மணிக்கு தி.நகர் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை அடுத்து அன்றைய தினமே, முதல்வர் வீடு திரும்பினார்,அவரை குறைந்தது நான்கு நாட்களாவது ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, மிக விரைவில் எடப்பாடி பழனிசாமி குணமடைந்து,அவருடைய வேலைகளை தொடர வேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார் .
அதில்,"டியர் பழனிசாமி ஜி" என குறிப்பிட்டு வாழ்த்து மடலை அனுப்பி உள்ளார்.
அதில்,
i am happy to know that you have come back home after a succesful eye operation,my best wishes and prayers for a speedy recovery so that you may resume your duties as early as possible.
மேலும்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து,நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.