
அதேபோல சென்னை வடக்கு மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையாக அஸ்ரா கார்க் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக சுதாகர் ஐபிஎஸ் நிறுவனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை காவல்துறை தலைமையக ஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இதுவரை பொறுப்பேற்று வந்த பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பதவியை, சத்யபிரியா ஐபிஎஸ் ஏற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி ஐபிஎஸ், மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் ஐபிஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தென்மண்டல ஐஜி-யாக ராஜேந்திர நாயர் ஐபிஎஸ் பொறுப்பேற்ற நிலையில், மேற்கு மண்டல ஐஜியாக பவானிஸ்வரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ஆசியம்மாள்..
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக காவல்துறையை சேர்ந்த 14 உயர் அதிகாரிகளுக்கு ஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது தமிழக காவல்துறை வரலாற்றிலேயே பெண் ஒருவர் உளவுத்துறையின் ஐஜியாக முதல் முறையாக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
அப்பொழுது உளவுத்துறையின் ஐஜியாக பொறுப்பேற்ற அந்த பெண்மணிதான் ஆசியம்மாள், தற்பொழுது 57 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார். படிப்பில் மிகவும் தேர்ந்தவரான ஆசியம்மாள் எம்.எஸ்.சி., எம்.டெக். எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணியில் சேர்ந்த ஆசியம்மாள் வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி.யாக தனது காவல்பணி வாழ்க்கையைத் தொடங்கினார். மகாபலிபுரம் டி.எஸ்.பி., சென்னை திருவொற்றியூர் சட்டம் –ஒழுங்கு உதவி ஆணையர், சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் போன்ற பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார் ஆசியம்மாள்.
சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு, உளவுத்துறை எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு, குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு பிரிவு ஆகிய பிரிவுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர் அவர். கடந்த 2018ம் ஆண்டு ஆசியம்மாளுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்ற பிறகு டி.ஐ.ஜி. ஆசியம்மாள் போலீஸ் பயிற்சி பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.