எம்மதமும் சம்மதமல்ல... அரசு அலுவலகங்களில் சாமி, சாமியார் படங்களுக்கு தடை!

Published : Dec 03, 2018, 01:29 PM ISTUpdated : Dec 03, 2018, 01:34 PM IST
எம்மதமும் சம்மதமல்ல... அரசு அலுவலகங்களில் சாமி, சாமியார் படங்களுக்கு தடை!

சுருக்கம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடவுள், மதம் குறித்த எந்த புகைப்படமோ அல்லது சிலைகளோ அல்லது மதத்திற்குரிய வழிபாடோ இருக்க கூடாது என்பதற்கான அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடவுள், மதம் குறித்த எந்த புகைப்படமோ அல்லது சிலைகளோ அல்லது மதத்திற்குரிய வழிபாடோ இருக்க கூடாது என்பதற்கான அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியட்டுள்ளது. 

முன்னதாக 1993-லேயே அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தங்களது வளாகங்களில் எந்தவிதமான புதிய வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கும் அல்லது ஏற்கெனவே உள்ள வழிபாட்டுக் கூடங்களை விரிவுபடுத்துவதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. 

மேலும் 2013-ல் பொதுவெளிகளில் எவ்விதமான வழிபாட்டுத் தலங்களையும் கட்டுவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கெனவே, பொதுப் பாதைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களைக் கருணை காட்டாமல் அகற்றுவதற்கும் உத்தரவிடப்பட்டது. தனது உத்தரவை மாநில அரசுகள் எந்த அளவுக்கு நிறைவேற்ற முற்பட்டன என்பதற்கான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவு கூறியது. தமிழக அரசும் தன் பங்குக்கு ஒரு அரசாணையை வெளியிட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றிவிட்டதாக அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கட்டுமானம்கூட அகற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. 

இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் கடவுகள் படங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை பொது அலுவலங்களிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நமது மாநிலம் மதச் சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், சாதுக்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் மற்றும் சிலைகளை அரசு அலுவங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது. ஆகையால் இந்தக் கட்டிடங்களில் இப்போது அவைகள் இருக்குமாயின் அவற்றை படிப்படியாகவும் எந்தவித அசம்பாவிதம் நிகழாதவாறு அகற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?