பொன்.மாணிக்கவேலை கண்டு அஞ்சும் தமிழக அரசு...!! பதவி நீட்டிப்பை எதிர்த்து மேல்முறையீடு?

By vinoth kumarFirst Published Dec 2, 2018, 12:43 PM IST
Highlights

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கமும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கமும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பில் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. பொன்.மாணிக்கவேல் மேலும் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்று ஆணை பிறப்பித்தது. ஆனால் நேற்று முன்தினம் பொன்மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில் தான் இந்த தீர்ப்பை வழங்கியது. மேலும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் நியமன ஆணையை அரசு உடனே வெளியிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த 30-ம் தேதியே ஓய்வு பெற்றவருக்கு உயர்நீதிமன்றம் பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சங்கமும் இணைந்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏன் பொன்.மாணிக்கவேலை கண்டு தமிழக அரசு அஞ்சுகிறது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

click me!