
விருதுநகர்
விருதுநகரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கிளைத் தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தேவையற்ற பணியிடங்களை ஒழிக்க வேண்டும்.
தேவையான பணியிடங்களை வெளி முகமை மூலம் நிரப்ப வேண்டும் என்றுஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.
எனவே பணியிடங்களை ஒழிக்க அமைக்கப்பட்ட ஆதிசேசையா தலைமையிலான பணியிடங்கள் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும்.
இதற்கான அரசாணை 56-யை ரத்து செய்ய வேண்டும்.
இந்தக் குழு அமைப்பதற்கு முன்பு அனைத்து அரசு துறைகளிலும் வெளி முகமை மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இக்குழுவை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.இ.கண்ணன், கிளைச் செயலாளர் முனியாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.