தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசு விசாரணை அறிக்கை ஏற்பு; வழக்குகள் முடித்து வைப்பு!!

By Narendran SFirst Published Sep 20, 2022, 6:10 PM IST
Highlights

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தமிழக அரசின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தமிழக அரசின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 10 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த மே 18ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. கற்களால் தாக்கி அட்டூழியம்..

அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று இந்த வழக்குகள் அனைத்தும்  முடித்து வைத்து உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக் கோரி ராஜ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 10 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கக் கோரி விஜயகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

இதே கோரிக்கையை முன்வைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்திரசேகர் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த மே 18ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கினை முடித்து வைத்தனர்.

click me!