தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. கற்களால் தாக்கி அட்டூழியம்..

By Ezhilarasan Babu  |  First Published Sep 20, 2022, 5:53 PM IST

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 


கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை கட்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

Tap to resize

Latest Videos

கற்களை கொண்டு தாக்கி  விரட்டியடித்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். பல ஆயிரம் செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர்  தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:  தனியார் பள்ளிக்கு இணையாக கல்வித் தரம் உயர்த்த மாநில கல்விக் குழு பரிந்துரைக்கும்: ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன்

தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடத்தில் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 11 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:  தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.. அண்ணாமலை வைத்த உருக்கமான வேண்டுகோள்.

 

click me!