தமிழக ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம்...?

 
Published : Sep 04, 2017, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
தமிழக ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம்...?

சுருக்கம்

Tamilnadu Governer Kalraj Mishra...?

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா, தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநராக இருந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கே.ரோசய்யாவின் பதவிக்காலம் 2016 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. ரோசய்யாவுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா (76) தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்ராஜ் மஸ்ரா, மத்திய அமைச்சரவையில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்திருந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மக்களவைத் தொகுதியில் இருந்து 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்ராஜ் மிஸ்ரா. உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள நிலையில், அவர் இந்தியா திரும்பி வந்ததும் தமிழக ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!