கை நிறைய சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு! தமிழக அரசு வழங்கும் 5 நாள் பயிற்சி!

Published : Jul 06, 2025, 06:38 PM IST
8th Pay Commission Salary Hike

சுருக்கம்

தமிழ்நாடு அரசு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கிறது. ஜூலை 10 முதல் 14 வரை சென்னையில் நடைபெறும்.

தமிழ்நாடு அரசு பல்வேறு தொழில்களுக்கு பயிற்சி கொடுக்கிறது. அதில் ஒன்றாக தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதன்படி 10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு அரசின் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” ஜூலை 10 முதல் 14ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.

பயிற்சியின் உள்ளடக்கம்

* இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல்.

* கேரட் மதிப்பீடுகள்.

* ஆசிட் சோதனை.

* எடை அளவு இணைப்பான்.

* விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate).

* ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.

* மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள்.

* தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பு வழிகாட்டல்

* பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள்,

* அவற்றை பெறும் நடைமுறைகள்.

* அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.

பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு www.editn.in அல்லது 9543773337 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!