Rajesh Das Arrest: காதல் மனைவி பீலா அளித்த புகார்.. முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கைது.. நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published May 24, 2024, 11:06 AM IST
Highlights

கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தையூர் பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கி அத்துமீறி நுழைந்ததாக மனைவி பீலா வெங்கடேஷ் அளித்த புகாரில் பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டு  கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின்  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து  ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்தது. 

Latest Videos

இதையும் படிங்க: 15 நாட்களில் கல்யாணம் வச்சுக்கிட்டு எங்களை விட்டுட்டு போயிட்டியே! கதறிய பெற்றோர்! அதிர்ச்சியில் மணப்பெண்!

இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டு பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியதை அடுத்து அவரது மனைவி பீலா விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பிரிந்து இருக்கும் மனைவி பீலாவின் வீட்டிற்கு ராஜேஷ் தாஸ் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், காவலாளியை மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்!

இந்த சம்பவம் குறித்து பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!