15 நாட்களில் கல்யாணம் வச்சுக்கிட்டு எங்களை விட்டுட்டு போயிட்டியே! கதறிய பெற்றோர்! அதிர்ச்சியில் மணப்பெண்!

By vinoth kumar  |  First Published May 24, 2024, 8:27 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் ஒத்த தெருவில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீடு புதுப்பித்து கட்டுமான வேலை நடந்து வருகிறது. கான்கிரீட் போடும் வேலை நடந்து வரும் நிலையில் அங்கு திருநாகேஸ்வரம் தோப்பு தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவர் வேலைக்கு சென்றுள்ளார். 


திருமணத்திற்கு 15 நாட்களே உள்ள நிலையில் கட்டிட வேலைக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் ஒத்த தெருவில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீடு புதுப்பித்து கட்டுமான வேலை நடந்து வருகிறது. கான்கிரீட் போடும் வேலை நடந்து வரும் நிலையில் அங்கு திருநாகேஸ்வரம் தோப்பு தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவர் வேலைக்கு சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: கருக்கா வினோத்தால் என்ஐஏவிடம் வசமாக சிக்கிய சென்னை பாலியல் கும்பல்.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

கான்கிரீட் கலவை அள்ளி செல்லும் போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி மின்சாரம் செல்லக்கூடிய வீட்டின் சர்வீஸ் ஒயரில் விழுந்துள்ளார். ஒயர் அறுந்து மின்சாரம் தாக்கியதில் வெங்கடேசன் நிலை குலைந்து மூச்சு பேச்சு இல்லாமல் கீழே சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடனிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

நிலை குலைந்து கீழே சரிந்துள்ளார். அவரை உடனடியாக அவருடன் வேலை செய்த மற்ற நபர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பார் ஆன பால்வாடி! சரக்குடன் ரீல்ஸ்! வாண்டடாக வந்து சிக்கிய திமுக பிரமுகரின் மகனை தட்டித்தூக்கிய போலீஸ்!

இதனையடுத்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெங்கடேசனுக்கு  நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் உயிரிழந்த அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியை செய்தியை கேட்ட மணப்பெண் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

click me!