இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 மீனவர்கள் …. சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

Asianet News Tamil  
Published : Aug 04, 2017, 06:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 மீனவர்கள் …. சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

சுருக்கம்

tamilnadu fishermen released by srilanka govt...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 மீனவர்கள் …. சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…இலங்கை சிறையில் இருந்து விடுதலையான  77 மீனவர்கள்  இன்று அதிகாலை காரைக்கால் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற தமிழக அமைச்சர்கள், மீனவர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.எல்லை தாண்டி மீன் பிடித்தாக  கூறி  இலங்கை கடற்படையால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இலங்கை நீதிமன்றம் 77 மீனவர்கள் விடுதலை செய்தது.

இதையடுத்து அந்த 77 மீனவர்களும் இலங்கை கடற்படையினர் கப்பல் மூலம் நேற்று காலை புறப்பட்டனர். நடுக்கடலில் அவர்கள் அனைவரும், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும்  ரோந்து கப்பல் மூலம் காரைக்கால்  அழைத்து வரப்பட்டனர்.

இந்த தமிழக மீனவர்களை அமைச்சர்கள்  ஜெயக்குமார்,  ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

 

 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!