குண்டர் சட்டம் பாய்ந்த மாணவி வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது…

First Published Aug 4, 2017, 6:40 AM IST
Highlights
student valaramathi arrested again another case


சேலம்

சேலத்தில் குண்டர் சட்டம் பாய்ந்த மாணவி வளர்மதியை மீது மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டு காவலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், வீராணம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகள் வளர்மதி (23). கடந்த மாதம் 12-ஆம் தேதி வளர்மதி சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி முன்பு நின்றுக் கொண்டு, மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதனையடுத்து கன்னங்குறிச்சி காவலாளர்கள் வளர்மதியை கைது செய்து கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

கைதான வளர்மதி மீது அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக கரூர் மாவட்டம் குளித்தலை, கோவை, சிதம்பரம், சேலம் பள்ளப்பட்டி, சேலம் நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இதனைத் தொடர்ந்து வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் அரிசிபாளையம் பாவேந்தர் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய நபரை விடுவிப்பது தொடர்பாகவும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது வளர்மதி உள்பட பலர் சேலம் நான்குரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வளர்மதி மீது பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது பள்ளப்பட்டி காவலாளர்கள் சாலைமறியல் தொடர்பான வழக்கில் வளர்மதியை மீண்டும் கைது செய்துள்ளனர்.

tags
click me!