+2 Students Get Bonus Marks : 12ம் வகுப்பு மாணவர்களுக்கு.. போனஸ் மதிப்பெண்கள்.! சூப்பர் அறிவிப்பு இதோ !!

Published : May 31, 2022, 11:40 AM IST
+2 Students Get Bonus Marks : 12ம் வகுப்பு மாணவர்களுக்கு.. போனஸ் மதிப்பெண்கள்.! சூப்பர் அறிவிப்பு இதோ !!

சுருக்கம்

+2 Students get Bonus Marks : +2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

அரசு தேர்வுகள் இயக்கம்

கடந்த மே 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில்,மே 28 ஆம் தேதி வரை நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான இரு வினா எண்கள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில்,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாளில் இடம்பெற்ற இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

போனஸ் மதிப்பெண்கள்

அதன்படி,பகுதி 1-அ,வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ,வினா எண் 5-க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், அதைப்போல,பகுதி -2,வினா எண் 29-க்கு மாணவர்கள் விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் எனவும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.ஏற்கனவே 12,10 ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், 11 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று முடிகிறது.

இதையும் படிங்க : அவர் சேகர்பாபு இல்ல "ஸ்நேக் பாபு. !" அமைச்சர் சேகர்பாபுவை பங்கம் செய்த எச்.ராஜா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

PREV
click me!

Recommended Stories

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!
திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்