சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அட்மிட்..!

Published : May 31, 2022, 10:37 AM ISTUpdated : May 31, 2022, 10:43 AM IST
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அட்மிட்..!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்றிரவு சிக்கன் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

திருக்கோவிலூர் அருகே சிக்கன் பிரியாணி சமைத்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்றிரவு சிக்கன் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

உடனே அனைவரும் மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!