Alert : 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களே...பள்ளிக்கல்வித்துறை 'முக்கிய' அறிவிப்பு..

By Raghupati RFirst Published Jan 3, 2022, 7:01 AM IST
Highlights

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த முதல்வர்,8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்தார். இதனால் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வழியிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.  இந்நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில்,9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மேலும், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜன.10 வரை விடுமுறை நீட்டிக்கப்டுகிறது என்றும்,  ஜன.10 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து,அவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!