#Breaking: Today Corona Case: தமிழகத்தில் 1500 ஐ தாண்டிய கொரோனா..சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு..

Published : Jan 02, 2022, 07:54 PM IST
#Breaking: Today Corona Case: தமிழகத்தில் 1500 ஐ தாண்டிய கொரோனா..சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு..

சுருக்கம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இதனிடையெ இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,304 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1489 ஆக கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் அதிகரித்து 1594 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 682 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 776 ஆக அதிகரித்துள்ளது. சென்னை அடுத்த படியாக செங்கல்பட்டில் 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 80 பேருக்கும், திருப்பூரில் 68 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 47 பேருக்கும் தூத்துக்குடியில் 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டியில் நேற்று 168 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 146 ஆக குறைந்துள்ளது. கோவையில் 75 ஆக இருந்த பாதிப்பு 80 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. இதில் 64 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லாதவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை
TVK vijay: தவெக இத்தனை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.! விஜய்க்கு வாய்ப்பே இல்லை.! கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்.!