சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா!

Published : May 26, 2025, 04:14 PM IST
Premalatha Vijayakanth

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.  கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது. கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதை கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் தொடர் தோல்விகளில் துவண்டு போயிலுள்ள தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி தொடரப்போகிறதா? அல்லது புதிய கூட்டணியில் இணைய போகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

இந்நிலையில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தருமபுரியில் நடைபெற்றது. இதில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும், தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் பொருளாளராகவும், அவைத்தலைவராக மருத்துவர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

அதன்படி சென்னையில் பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக கிறிஸ்டோபர் ஜெயக்குமார், கொளத்தூர்- கோவிந்தராஜ், திருவிக நகர்- அம்சா நந்தினி, திருவொற்றியூர்-ஆரோக்கிய ராஜ், ஆர்.கே.நகர்- கண்ணன், ராயபுரம்- அம்சா, மதுரவாயல்- சிவக்குமார், அம்பத்தூர் - நாகூர் மீரான், விருகம்பாக்கம் - மாரி, வேளச்சேரி - கலா, சோளிங்கநல்லூர் - ஜெய்சங்கர், ஆலந்தூர்- செல்வஜோதிலிங்கம், எழும்பூர்- பிரபு, துறைமுகம்- அருண், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- செல்வக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நிர்வாக ரீதியான 9 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் மிகப்பெரிய மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவுகளையும் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Tamil News Live today 07 January 2026: இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பு