
Tamilisai Soundararajan criticized the Communist Party : தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை திமுகவை மட்டுமில்லாமல் திமுக கூட்டணி கட்சியையும் வெளுத்து வாங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி சிவா காமராஜரை பற்றி தான் பேசியது தவறு என்று கூறவில்லை. இன்றோடு இதனை விற்று விடுங்கள் என்று கூறியுள்ளார். இதுவே பாஜக பேசியிருந்தால் உடனே ஆர்ப்பாட்டம் செய்ய இறங்கியிருப்பார்கள். பேசுனா போதுமா மன்னிப்பு கேட்டால் போதுமா என்று கேட்பார்கள் காமராஜர் பற்றி பேசினால் பாஜக காரர்களுக்கு என்ன அக்கறை என்று கேட்பார்கள். காமராஜர் எல்லோருக்குமான தலைவர் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை படித்து இருக்கிறது என்றால் அதில் காமராஜர் உடைய பங்கும் உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறும் எந்த பிரச்சனையையும் கண்டுகொள்ளாத முதலமைச்சர் மக்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள் திமுக உறுப்பினராக்குங்கள், பாஜக , அதிமுகவை பற்றி பேசுங்கள் எனக் கூறுவது என்பது வேதனை அளிக்கிறது. முதலமைச்சர் 2026 பொதுத் தேர்தலில் 30 சதவீதம் வாக்கு எப்படி வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. காமராஜரை நாங்கள் காங்கிரஸ்காரராக பார்க்கவில்லை ஏனென்றால் கடைசி காலத்தில் காமராஜருக்கு மதிப்பளிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என தெரிவித்தார். இந்த விஷயத்தை நேற்றோடு முடிந்தது விட்டது என செல்வப்பெருந்தகை தெரிவிக்கிறார். எனவே கூட்டணியை பார்த்து காங்கிரஸ் கட்சி தான் பயந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறார்கள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு செல்வது சிவப்பு கம்பளம் இல்லை, ரத்த கம்பளம் என தெரிவிக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிவப்பு கம்பளத்திற்கு அடியில் பெட்டி இருந்தால் தான் தெரியும். உண்டியலையெல்லாம் இப்போது கம்யூனிஸ்ட் மறந்து விட்டார்கள். கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும், 10 நிமிடங்கள் இல்லை 100 நிமிடங்கள் பேசினாலும் மக்கள் திருப்தி அடையமாட்டார்கள்.
வீட்டிற்கு அரசு போகிறார்கள் என முதல்வர் கூறுகிறார். ஆனால் அனைத்து தரப்பு மக்களும் ரோட்டில் நிற்கிறார்கள். ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் என பலர் ரோட்டுக்கு வந்து விட்டனர். இதையெல்லாம் விட்டுவிட்டு 2026ல் 30% வாக்கு வாங்க வேண்டும் அதனால் மக்களிடம் சென்று பேசுங்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார் எப்படி சொன்னாலும் மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட போவதில்லை என தமிழிசை தெரிவித்தார்.