தமிழ் எழுத்தாளருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு.. குழந்தை சிறுகதைக்கு விருது வழங்கி கவுரவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jul 31, 2022, 5:32 PM IST
Highlights

2021 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் முருகேசன் என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

சாகித்ய அகாடமி தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு பல பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.அதில் சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருதாக பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் முருகேசன் என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அலர்ட்!! நர்சிங், பி.பார்ம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பது..? கூடுதல் விவரம்..

எழுத்தாளர் முருகேசன் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான இவர், தமிழில் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். தற்போது கவிஞர், பதிப்பாசிரியர், சிற்றிதழ் ஆசிரியர்,     கல்வி ஆலோசகர், எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்.

மேலும் படிக்க:அலர்ட் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை.. இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை.. வானிலை அப்டேட்

இவர் குழந்தைகளுக்காக மட்டும் இதுவரை 18 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் ஏராளமான கவிதை புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 2010 ஆம் ஆண்டு இவர் எழுதிய குழந்தைகளுக்கான சிறுக்கதை தொகுப்பு அச்சிட்டு வழங்கப்பட்டது. தமிழக அரசின் பல விருதுகளையும் பல்வேறு தனியார் அமைப்புகளின் விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

click me!