அண்ணா சாலைக்கு வர தயார். இடத்தை குறிப்பிடுங்கள். தனியாக வருகிறேன். நீங்கள் தடுத்து நிறுத்திப் பாருங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை துணை முதல்வர் உதயநிதிக்கு சவால் விடுத்துள்ளார்.
06:56 PM (IST) Feb 20
06:54 PM (IST) Feb 20
06:47 PM (IST) Feb 20
05:16 PM (IST) Feb 20
பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலைய பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
03:49 PM (IST) Feb 20
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய தினம் நடக்க உள்ளது பற்றியும், அதற்கான நெட்டிசன்கள் ரியாக்ஷன் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
03:36 PM (IST) Feb 20
03:22 PM (IST) Feb 20
03:21 PM (IST) Feb 20
03:02 PM (IST) Feb 20
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-வங்கதேச அணிகள் இடையேயான போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
02:58 PM (IST) Feb 20
திருமுல்லைவாயில் சுதர்சன் நகரில் தின்னர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பள்ளிக்கு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
01:32 PM (IST) Feb 20
ரீ-ரிலீஸ் ட்ரெண்டில் தற்போது மற்றுமொரு தமிழ் படம் இணைந்திருக்கிறது. சேரனோட எழுத்துலயும், டைரக்ஷன்லயும் 2004-ல வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆட்டோகிராஃப். இந்த கிளாசிக் ஹிட் திரைப்படம் தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக ரெடியாக உள்ளது. மேலும் படிக்க
12:39 PM (IST) Feb 20
தமிழ்நாட்டு நிதி உரிமைக்காக, அண்ணாமலையை எதையாவது செய்ய சொல்லுங்கள். தமிழ்நாடு கேட்கும் நிதியை வாங்கித் தர துப்பில்லை. சவால் விடுகிறார். மக்கள் பிரச்சினையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். அண்ணாமலைக்கு தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
12:15 PM (IST) Feb 20
11:55 AM (IST) Feb 20
திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிர்மலா சீதாராமனை விமர்சித்த வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11:32 AM (IST) Feb 20
சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாக அறிமுகமானாலும் அடுத்தடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என தன்னை ஒரு ஹீரோவாக மெருகேற்றிக் கொண்டே சென்றார். அவரின் வளர்ச்சியால் தான் சந்தானமும் காமெடியை கைவிட்டு ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்தாராம். மேலும் படிக்க
10:42 AM (IST) Feb 20
ஈரம், வல்லினம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அறிவழகன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் சப்தம். இப்படத்தில் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சப்தம் படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டு உள்ளனர்.
10:11 AM (IST) Feb 20
வாரணாசியில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு விமானம் மூலம் வீரர்களை மீட்க ஏற்பாடு செய்தார்.
10:02 AM (IST) Feb 20
டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களுக்கு முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் படத்தை விட பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு தான் முன்பதிவில் அதிக வசூல் கிடைத்துள்ளது. மேலும் படிக்க
08:56 AM (IST) Feb 20
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த கையோடு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
08:50 AM (IST) Feb 20
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் நடத்தப்பட்டாலும் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்றே கூறப்படுகிறது. மேலும் படிக்க
07:54 AM (IST) Feb 20
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சிகள் பாதிக்கப்படலாம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
07:44 AM (IST) Feb 20
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, நமது தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும், மாதம் தோறும் ரூ.2,500 க்கும் அதிகமாக வழங்கப்படும். இது பாரதப் பிரதமர் மோடி கேரண்டி என தெரிவித்தார்.
07:07 AM (IST) Feb 20
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
06:58 AM (IST) Feb 20
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்ற இந்தியா வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துபாய் ஸ்டியத்தில் நடைபெறுகிறது. இந்தியா வங்கதேசம் இதுவரை மோதியுள்ள 41 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
06:51 AM (IST) Feb 20
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.100.90ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.48ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை லிட்டருக்கு ரூ.90.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.