Tamil News Live : கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும்.அண்ணாமலை ஆவேசம்.

Live Breaking News in Tamil  : தமிழக அரசின் அரசாணை 149ஐ நீக்கம் செய்து, ஆசிரியர் பணிக்காக, இப்போது நிரப்பப்படும் காலிப் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களை,  நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை பாஜக சார்பில் வேண்டி வலியுறுத்துகிறேன்..தமிழக மாணவர்களின் கல்வியோடு தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

5:19 PM

அங்கன்வாடி மையங்களில் LKG , UKG மாணவர் சேர்க்கை எப்போது..? அறிவித்தது தொடக்க கல்வி இயக்குநரகம்..

தமிழகத்திலுள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி க்கு மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. LKG , UKGக்கு மாணவர் சேர்க்கை துவங்கவில்லை என புகார் எழுந்த நிலையில், தொடக்ககல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

3:47 PM

2 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.. சுமார் ரூ.500 கோடி இழப்பு..

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை நிர்ணயம் செய்யக்கோரி  2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.இந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் ரூ.500 கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க

2:35 PM

உங்களை தேர்ந்தெடுத்தது இதற்காகவா..? அன்று கருப்பு சட்டை போட்டு எதிர்த்தீர்கள்.. மநீம விளாசல்

திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காகவா திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? என்று மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 மேலும் படிக்க

1:56 PM

தந்தையின் உடலை அனைத்து அப்பா எழுந்துருங்க என்று கதறிய நைனிகா.. உடைந்து நின்ற மீனா..

மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி நிகழ்ச்சியின்போது அவர்களது மகள் நைனிகா அப்பா எழுந்திரிங்க என கதறியது காட்சி அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அங்கிருந்த பலரும் இதை பார்த்து கதறி அழுதனர். அருகிலிருந்த மீனா உடைந்து நின்றார். அந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.

மேலும் படிக்க

1:18 PM

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

1:13 PM

முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..

திருமணமான மறுநாளில் உடலில் காயங்களுடன் புதுமண பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் படிக்க

1:08 PM

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி சென்னை வருகை

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தருகிறார். அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோர உள்ளார்.

1:07 PM

உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை.. திருமாவளவன் பகீர்

உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

1:04 PM

பொதுக்குழு நடத்துவதை விரும்பாத ஓபிஎஸ் கற்பனை கடிதத்தை எழுதியிருக்கிறார்.. கே.பி.முனுசாமி

சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமையை இழக்கிறார் ஓபிஎஸ் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும், பொதுக்குழு நடத்துவதை விரும்பாத ஓபிஎஸ் கற்பனை கடிதத்தை எழுதியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

12:45 PM

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் என்பது ஆபத்தானது - நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:42 PM

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்த உத்தரவு.. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னூரிமை..

இடைக்கால ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் உத்தரவை பல்வேறு மாவட்டங்களில் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க

12:16 PM

மகன் இல்லாத குறையை தீர்க்க இடுப்பில் துண்டுடன் இறுதிச்சடங்கு..காதல் கணவருக்கு மீனா கண்ணீர் மல்க கடைசி முத்தம்

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசகர், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு மீனா கடைசியாக கண்ணீர் மல்க முத்தம் கொடுத்தது, அங்கிருந்த பலரையும் கண் கலங்க வைத்தது. 
மேலும் படிக்க

12:04 PM

திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்த போது, அப்போது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்த அவர், ஆய்வின் பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலவலர்கள் மீது விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  

மேலும் படிக்க

11:50 AM

மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி முன்னிலையில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திமுகவில் இணைவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் எந்த கட்சிக்கும் செல்லவில்லையென சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

11:22 AM

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு... உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

11:19 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.20-க்கு விற்பனை ஆகிறது.

மேலும் படிக்க

11:11 AM

காவல்துறையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு.. தேதி இன்று அறிவிப்பு.. விண்ணபிப்பது எப்படி ..?

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 3,552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிடுகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகிறது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். இதையடுத்து வரும் 7ம் தேதி முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

மேலும் படிக்க

10:36 AM

முதல்வர் திடீர் ஆய்வு.. பணியில் இல்லாத ஊழியர் மீது நடவடிக்கை

ராணிப்பேட்டையில் நடைபெற உள்ள அரசு விழாவிற்கு செல்லும் வழியில் அரசு குழந்தைகள் நல மையத்தின் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

10:00 AM

உள்ளாட்சி இடைத்தேர்தல்... அதிமுக புறக்கணிப்பு?

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:34 AM

ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

9:12 AM

அப்பவே இவர்களை கைது செய்திருந்தா இப்படி ஒரு கொலை நடந்திருக்குமா.. கொதிக்கும் ராமதாஸ்..!

ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

8:49 AM

கந்துவட்டி வசூலித்த தாய், மகன் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாசுதேவன் என்பவரிடம் கந்து வட்டி வசூலித்த தாய், மகன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழுதலைக்குடியை சேர்ந்த தாய் சோலையம்மாள், மகன் ஜெயவீரபாண்டியன் இருவரிடமிருந்து கையெழுத்து மட்டும் இருந்த 11 பத்திரம், 25 அடமான பத்திரம் 8 உத்தரவாத பத்திரங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

8:41 AM

முன்னாள் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டாரா இபிஎஸ்?

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  பன்னீர் ரோஜா மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மீது இபிஎஸ் கோபப்பட்ட நிலையில், பென்ஜமினை வீட்டிற்கு அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

8:07 AM

குடியரசுத் தலைவர் தேர்தல்.. இன்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில்,  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோருகிறார்.

7:54 AM

சென்னையில் தெருநாய்க்கு உணவளித்த பெண்ணின் இருசக்கர வாகனம், செல்போன் திருட்டு

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தெருநாய்க்கு உணவளித்த கோமதி என்பவரின் இருசக்கர வாகனம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவியுடன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உணவளித்துக் கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வாகனத்தை திருடிச் சென்றார் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7:48 AM

நர்ஸை புதரில் வைத்து நாசம் செய்த கொடூரன்கள்.. தாயிடம் சொல்லி கதறிய மகள்..!

வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

7:18 AM

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

7:14 AM

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

7:03 AM

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் பலி

சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி (38) விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6:57 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.  ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

6:55 AM

39வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் 39வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை.  பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5:19 PM IST:

தமிழகத்திலுள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி க்கு மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. LKG , UKGக்கு மாணவர் சேர்க்கை துவங்கவில்லை என புகார் எழுந்த நிலையில், தொடக்ககல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

3:47 PM IST:

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை நிர்ணயம் செய்யக்கோரி  2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.இந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் ரூ.500 கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க

2:35 PM IST:

திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காகவா திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? என்று மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 மேலும் படிக்க

1:56 PM IST:

மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி நிகழ்ச்சியின்போது அவர்களது மகள் நைனிகா அப்பா எழுந்திரிங்க என கதறியது காட்சி அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அங்கிருந்த பலரும் இதை பார்த்து கதறி அழுதனர். அருகிலிருந்த மீனா உடைந்து நின்றார். அந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.

மேலும் படிக்க

1:49 PM IST:

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

1:13 PM IST:

திருமணமான மறுநாளில் உடலில் காயங்களுடன் புதுமண பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் படிக்க

1:08 PM IST:

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தருகிறார். அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோர உள்ளார்.

1:07 PM IST:

உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

1:04 PM IST:

சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமையை இழக்கிறார் ஓபிஎஸ் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும், பொதுக்குழு நடத்துவதை விரும்பாத ஓபிஎஸ் கற்பனை கடிதத்தை எழுதியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

1:16 PM IST:

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:42 PM IST:

இடைக்கால ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் உத்தரவை பல்வேறு மாவட்டங்களில் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க

12:16 PM IST:

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசகர், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு மீனா கடைசியாக கண்ணீர் மல்க முத்தம் கொடுத்தது, அங்கிருந்த பலரையும் கண் கலங்க வைத்தது. 
மேலும் படிக்க

12:04 PM IST:

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்த போது, அப்போது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்த அவர், ஆய்வின் பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலவலர்கள் மீது விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  

மேலும் படிக்க

11:51 AM IST:

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி முன்னிலையில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திமுகவில் இணைவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் எந்த கட்சிக்கும் செல்லவில்லையென சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

11:47 AM IST:

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

11:19 AM IST:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.20-க்கு விற்பனை ஆகிறது.

மேலும் படிக்க

11:11 AM IST:

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 3,552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிடுகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகிறது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். இதையடுத்து வரும் 7ம் தேதி முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

மேலும் படிக்க

10:36 AM IST:

ராணிப்பேட்டையில் நடைபெற உள்ள அரசு விழாவிற்கு செல்லும் வழியில் அரசு குழந்தைகள் நல மையத்தின் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

10:38 AM IST:

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:34 AM IST:

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

9:12 AM IST:

ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

8:49 AM IST:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாசுதேவன் என்பவரிடம் கந்து வட்டி வசூலித்த தாய், மகன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழுதலைக்குடியை சேர்ந்த தாய் சோலையம்மாள், மகன் ஜெயவீரபாண்டியன் இருவரிடமிருந்து கையெழுத்து மட்டும் இருந்த 11 பத்திரம், 25 அடமான பத்திரம் 8 உத்தரவாத பத்திரங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

8:41 AM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  பன்னீர் ரோஜா மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மீது இபிஎஸ் கோபப்பட்ட நிலையில், பென்ஜமினை வீட்டிற்கு அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

8:07 AM IST:

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில்,  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோருகிறார்.

7:54 AM IST:

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தெருநாய்க்கு உணவளித்த கோமதி என்பவரின் இருசக்கர வாகனம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவியுடன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உணவளித்துக் கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வாகனத்தை திருடிச் சென்றார் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7:49 AM IST:

வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

7:18 AM IST:

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

7:14 AM IST:

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

7:03 AM IST:

சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி (38) விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6:57 AM IST:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.  ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

6:55 AM IST: