MP Kanimozhi : மத்திய அரசு செயல்படுத்தி வரும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று கூறுகிறார் எம்.பி கனிமொழி.
"விஸ்வகர்மா யோஜனா" திட்டம் என்பது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் கைவினைகலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தரப்படும் அடையாள அட்டையின் மூலமாக அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மேலும் முதல் தவணையில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், இரண்டாவது முறை இரண்டு லட்சம் ரூபாய் வரையிலும் 5% வட்டியுடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்த அமைச்சகத்தால் இப்போது செயல்பாட்டில் இருந்து வரும் இந்த விஸ்வகர்மா திட்டம், தமிழகத்தை பொறுத்தவரை செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கிறார். சாதிய அடிப்படையிலான தொழில் முறையை இந்த விஸ்வகர்மா தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
undefined
"நீங்க 200 கோடினா; நான் 2000 கோடி" மீண்டும் விஜயை வம்பிழுக்கும் சீமான்!
இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடந்த குளிர்கால கூட்ட தொடரில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, திமுக விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக நிராகரிக்கின்றது. தமிழகத்தின் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க ஸ்டாலின் இது குறித்த விஷயத்தை ஏற்கனவே பலமுறை பேசியிருக்கிறார்.
ஆகவே இந்த விஷயத்தில் என்னுடைய நிலைபாடும் அதுதான். சாதி அமைப்பையும், பெற்றோர்களின் தொழிலை தான் குழந்தைகள் ஏற்க வேண்டும் என்கின்ற குலத்தொழில் முறையையும் இந்த திட்டம் மீண்டும் கொண்டுவர நினைப்பதால், அதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆகவே அந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார் எம்.பி கனிமொழி.
கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி இந்த விஸ்வகர்மா திட்டம் குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் எழுதிய கடிதம் ஒன்றையும் அண்மையில் நினைவு கூர்ந்து இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். "சாதிய அடிப்படையிலான குலத்தொழில் முறையை தான் இந்த விஸ்வகர்மா திட்டம் கொண்டு வருகிறது. ஆகவே இதை செயல்படுத்திட வேண்டும் என்றால் இத்திட்டத்தில் மாற்றங்களை எல்லாம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில்" தான் குறிப்பிட்டு இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்தில்?