வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொரோனா...! விருதுநகர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

By Ajmal Khan  |  First Published Jul 22, 2022, 3:25 PM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று தமிழகம் முழுவதும்  2290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16ஆயிரத்து 504 பேர் கொரோனா பாதிபால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 18 ஆம் தேதி வீடு திரும்பினார். இதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். 

பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்..!தண்டோரா மூலம் எச்சரிக்கை..நள்ளிரவில் சாலையில் வீசி சென்ற கிராம மக்கள்..

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வந்ததையடுத்து விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமசந்திரன் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.தமிழக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர், நாசர், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் என அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு கொரோனா… அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 516 பேருக்கு தொற்று!!

click me!