அட கடவுளே! புடவைக்காக அக்காவுடன் சண்டை போட்டதால் கல்லூரி மாணவி ரயில் பாய்ந்து தற்கொலை? வெளியான அதிர்ச்சி தகவல்

Published : Jul 22, 2022, 03:05 PM IST
அட கடவுளே! புடவைக்காக அக்காவுடன் சண்டை போட்டதால் கல்லூரி மாணவி ரயில் பாய்ந்து தற்கொலை? வெளியான அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

மாணவி நிரோஷா கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார்.  மேலும் விழாவில் கலந்து கொள்வதற்காக தனது, அக்காவான பவித்ராவின் சேலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

புடவைக்காக அக்காவுடன் சண்டை போட்டதன் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம்  சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகள் பட்டு என்ற நிரோஷா (20). இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் 3ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல கல்லூரி செல்ல சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கு இவர் வந்துள்ளார். பின்னர், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்துள்ளார். 

இதில், நிரோஷா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி நிரோஷா கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார்.  மேலும் விழாவில் கலந்து கொள்வதற்காக தனது, அக்காவான பவித்ராவின் சேலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிரோஷாவின் அக்கா பவித்ரா ஏன் என்னுடைய சேலையை பயன்படுத்தினாய் என நேற்று நள்ளிரவு சண்டையிட்டதாக கூறப்படுகிறது . இதனால் கவலை அடைந்த மாணவி நிரோஷா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருந்த போதிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி