சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு...! வேன், கார் மீது தாக்குதல்.. பாதியிலேயே கூட்டத்தை முடித்த நாம் தமிழர்கள்

By Ajmal KhanFirst Published Jul 22, 2022, 2:53 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் மேடைப் பேச்சால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினர் மோதிக்கொண்ட காரணத்தால் பாதியிலேயே பொதுக்கூட்டம் முடிவடைந்தது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆவேச பேச்சுக்கு இளைஞர்கள் மட்டுமில்லாமல் வயது வித்தியாசம் பார்க்காலம் பலரும் ரசிகர்களாக இருப்பார்கள் அந்தளவிற்கு தனது  பேச்சால் அனைவரையும் கட்டிபோடுபவர் சீமான், அப்படி இளைஞர்களை ஈர்க்கும் சீமானின் பேச்சால் பொதுக்கூட்டத்தில் மோதல் சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் பெருவிழா நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக பிரம்மதேசம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொடி கம்பம் ஏற்றுவதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த தகவலை மேடைப்பேச்சின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அவரது கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் தொடரும் ஐடி ரெய்டு..!இபிஎஸ்க்கு செக் வைக்கும் பாஜக...! மோடியிடம் சரணடைகிறாரா எடப்பாடி?-ஜெகதீஸ்வரன்

இதனை அடுத்து மேடையில் பேசிய சீமான் இந்த பகுதி உனது கோட்டை என்றால் தமிழகம் முழுவதும் எனது கோட்டை என கூறினார். எங்கள் கட்சி கொடியை ஏற்ற விடமாட்டேன் என்கிறார்கள், கருணாநிதி, ஜெயலலிதா,விஜயகாந்த் போன்றோர் கொடி ஏற்றும் போது எங்கே சென்றார்கள் என கேள்வி எழுப்பினார். இரண்டு சீட், ஒரு சீட்க்காக அலைபவர்கள், பெட்டிக்காக செல்பவர்கள், என்னை எப்படி கொடியேற்றக்கூடாது என தெரிவிக்கலாம் என ஆவேசமாக பேசினார். தேர்தலில் வா தனித்து போட்டியிட்டு பார்ப்போம் என சவால் விடுத்தார். இதன் காரணமாக  நாம் தமிழர் கட்சி மற்றும் கூட்டத்தை பார்க்க வந்த பார்வையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழுல் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்..!தண்டோரா மூலம் எச்சரிக்கை..நள்ளிரவில் சாலையில் வீசி சென்ற கிராம மக்கள்..

இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வேன் மற்றும் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்த  பெரும்பாடு பட்ட நிலையில் திடீரென மழைப் பெய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்  நாலா பக்கமும் சிதறி ஓடினர். படிப்படியாக மழை வலுப்பெற்றதால்  சீமான் மேடைப்பேச்சை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு புறப்பட்டு சென்றார்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை  செய்யாறு டிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீசார் மாவட்ட எல்லை வரையில் சென்று பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...!கெடு விதித்த நீதிமன்றம்..! ஶ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்த பெற்றோர்..

 

click me!