
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் ஜூன் 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும் ஜூன் 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பருவத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்
அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்.. பி.இ படிப்புகளுக்கு எப்போது வரை விண்ணப்பிக்கலாம்..? புதிய அறிவிப்பு