Tamil Nadu Public Exam: 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி வெளியீடு.. பொதுத்தேர்வு மே 6 ல் தொடக்கம்..

Published : Apr 01, 2022, 02:20 PM IST
Tamil Nadu Public Exam: 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி வெளியீடு.. பொதுத்தேர்வு மே 6 ல் தொடக்கம்..

சுருக்கம்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.  

மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும்  தொடங்கிறது.மேலும், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் முதலில்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. அதனுடன், மே  4 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட்..! பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம்..

இந்நிலையில் நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி குறித்தான அறிவிப்பு வெளியானது. அதில் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்தெந்த தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறபித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொதுப்பிரிவு, தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

அனைத்து செய்முறை தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், மதிப்பெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கான பொதுதேர்வு 9 ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும் படிக்க: அலர்ட்..! பிளஸ் 1 செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.. அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அப்டேட்..

இதனிடையே இன்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25 - மே 2 ஆம் தேதிக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், செய்முறை மதிப்பெண்களை மே 4 ஆம் தேதிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமர் மோடி..!
Tamil News Live today 16 December 2025: 10 மீ. கூட வியூ இல்லை.. கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்