Tamilnadu Rains : கொளுத்துற வெயிலுக்கு கூல் அப்டேட்.!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. எங்கு தெரியுமா ?

Published : Apr 01, 2022, 01:09 PM IST
Tamilnadu Rains : கொளுத்துற வெயிலுக்கு கூல் அப்டேட்.!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. எங்கு தெரியுமா ?

சுருக்கம்

தமிழகத்தில் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் சூரியனால் வியர்வை மழையில் நனைத்து தவித்து வருகின்றனர் மக்கள். பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

வானிலை ஆய்வு மையம் :

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மன்னார் வளைகுடா பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஏப்ரல் 2) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  நாளை மறுநாள் (ஏப்ரல் 3)  தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

மழை பெய்யும் இடங்கள் :

மேலும், 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிக பட்சமாக வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அறிவித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?
திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலி..! ஒரத்தநாட்டில் பரபரப்பு..! என்ன நடந்தது?