இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை- வானிலை மையம்

Published : Dec 20, 2022, 01:48 PM IST
இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை- வானிலை மையம்

சுருக்கம்

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரர்வதால் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடலின் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  20.12.2022 முதல்  22.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 23.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.24.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி.! திருச்சி சிறப்பு முகாமில் 9 பேர் கைது..! என்.ஐ.ஏ அதிரடி

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

20.12.2022 : தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும்.
21.12.2022 மற்றும் 22.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும். 


23.12.2022:  மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

சென்னை அண்ணா மேம்பாலத்தின் 50 ஆண்டு விழா..! 9 கோடியில் சீரமைப்பு- எ.வ வேலு தகவல்

PREV
click me!

Recommended Stories

Crop Loan: பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
AIADMK: நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா? அதிர்ச்சியில் இபிஎஸ்!