விவசாயிகளுக்கு உற்ற தோழனாக நான் இருப்பேன்.. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி நிவாரணம் அறிவிப்பு..

Published : Apr 17, 2022, 01:18 PM IST
விவசாயிகளுக்கு உற்ற தோழனாக நான் இருப்பேன்.. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி நிவாரணம் அறிவிப்பு..

சுருக்கம்

தர்மபுரியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.  

தர்மபுரியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிர்ச்சி..! நிலம் தாங்க எங்க வாழ்க்கை.. தற்கொலை செய்த விவசாயி.. சடலத்துடன் சாலை மறியல்.. நடந்தது என்ன..?

முன்னதாக, கடந்த சில நாட்களாக பாலவாடி பகுதியில் கெயில் நிறுவனம் சார்பில் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் நில அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டன.இந்த நிலையில் தான், கடந்த புதன்கிழமை அன்று  காலை பாலவாடி பகுதியில் உள்ள கிராமங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் மீண்டும் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயி கணேசன், தனது விளைநிலத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!