தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு; நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

By Velmurugan sFirst Published Jan 8, 2023, 9:39 AM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். நாளைய தினமே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின்படி பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்பட ரூ.1000 உள்ளிட்டவை இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி; தச்சன்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளன. கரும்பு கொள்முதலுக்கு மட்டும் தமிழக அரசு ரூ.71 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் ஏற்கனவே தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை இந்த திட்டதினை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் மாரத்தான் போட்டி; 20,000 போட்டியாளர்கள் பேர் பங்கேற்பு

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திட்டத்தின் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. வருகின்ற 13ம் தேதி வரை பொதுமக்கள் தங்களுக்கான பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் வாங்க இயலாதவர்கள் வருகின்ற 16ம் தேதியும் தங்களுக்கான பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

click me!