நீட் தேர்வில் தோல்வி...! பின்னடைவை கண்டு பயப்பட வேண்டாம்- ஆளுநர் ஆர்.என்.ரவி

By Ajmal KhanFirst Published Sep 8, 2022, 2:49 PM IST
Highlights

நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை கண்டு பயப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ஆளுநர் ரவி மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
 

 நீட் தேர்வு முடிவு வெளியீடு

நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும்  17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர். இதனையடுத்து இந்த தேர்வு முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய  1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். அதில் தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் - 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடமும், ஹரிணி - 702 மதிப்பெண் - 2வது இடமும் பிடித்துள்ளார். நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தன்ஷிகா தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வெழுதிய 50% மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். நேற்று இரவு தேர்வு முடிவு வெளியான நிலையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த மாணவி லக்‌ஷனா ஸ்வேதா நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

NEET UG Result: நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் .. இந்திய அளவில் 30வது இடத்தை பிடித்த திரிதேவ் விநாயகா..

மாணவர்கள் பயப்பட வேண்டாம்

மாணவி லக்‌ஷனா ஸ்வேதா  பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இதற்கிடையில் சொந்த ஊரிலே மருத்துவம் பயில ஆசைப்பட்டு அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்பொழுது மாணவி தான் நீட் தேர்வில் தோல்வியடைந்ததை பார்த்து மன வேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி டையவைத்துள்ளது. இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.ன் ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறவும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் கேட்டுக் கொண்டார்.

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)

நீட் தேர்வில் பல பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் தனது  மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறவும்,  மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும்  ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்..! நீட் தேர்வில் தோல்வி..! திருவள்ளூர் மாவட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை
 

click me!