2022 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவன் திரிதேவ் விநாயகா தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். aஇந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 30 வது இடத்தை பிடித்துள்ளார்.
மாணவன் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்களுடன், தரவரிசைப் பட்டியலில் 99.9976198 மதிப்பெண் விழுக்காடு(per centile) பெற்று 30 இடத்தை தக்கவைத்துள்ளார். அதேபோன்று, மாணவி எம்.ஹரிணி 702 மதிப்பெண்களுடன், தரவரிசைப் பட்டியலில் 99.9975632 மதிப்பெண் விழுக்காடு பெற்று 43வது இடத்தில் உள்ளார்.
2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க:neet 2022ug: tamilnadu: நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி 6 % குறைந்தது: டாப்-50யில் இருவர்: உ.பி. முதலிடம்
அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி விடைகுறிப்பு மற்றும் ஒஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் நாடுமுழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.,10 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாட்டில் 17, 645,71 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க:neet 2022 ug: tanishka: நீட் தேர்வு முடிவுகள்:தமிழகம் எப்படி? ராஜஸ்தான் மாணவி முதலிடம்: 9.93 லட்சம் பேர் பாஸ்
இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 51.28 % ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 54% ஆக இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், மொத்தம் 1.32 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 67,789 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 51.2 %. கடந்த ஆண்டுடன் (57.4%) ஒப்பிடுகையில் விட 6% குறைவாகும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 50 இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரில் ஒரு மாணவரும், ஓபிசி வகுப்பினரில் 6 மாணவர்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்தாண்டு இட ஒதுக்கீடு பிரிவு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. முதல் 50 இடங்களில், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினை சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவு வெளியானது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..
இந்நிலையில் தமிழகத்தில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவன் திரிதேவ் விநாயகா தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 30 வது இடத்தை பிடித்துள்ளார்.
மாணவன் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்களுடன், தரவரிசைப் பட்டியலில் 99.9976198 மதிப்பெண் விழுக்காடு(per centile) பெற்று 30 இடத்தை தக்கவைத்துள்ளார். அதேபோன்று, மாணவி எம்.ஹரிணி 702 மதிப்பெண்களுடன், தரவரிசைப் பட்டியலில் 99.9975632 மதிப்பெண் விழுக்காடு பெற்று 43வது இடத்தில் உள்ளார்.