இளநிலைமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தமிழகம் கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. முதல் 50 இடங்களுக்குள் இரு மாணவர்கள் மட்டுமே வந்துள்ளனர்.
இளநிலைமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தமிழகம் கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. முதல் 50 இடங்களுக்குள் இரு மாணவர்கள் மட்டுமே வந்துள்ளனர்.
நாடுமுழுவதும் கடந்த ஜூலை 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.
முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே அபு தாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய், குவைத்சிட்டியில் தேர்வு நடந்தன.
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 11.15 மணிக்கு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இ்ந்த நீட் தேர்வில் மொத்தம் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவரி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்தார். இவர் நீட் தேர்வில் 99.99 மதிப்பெண்கள் எடுத்தார். டெல்லியைச் சேர்ந்த மாணவி வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வது இடத்தைப் பிடித்தார்.
வழக்கம் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4லட்சத்து 29ஆயிரத்து 160 மாணவர்களும், 5 லட்சத்து 63ஆயிரத்து 902 மாணவிகளும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவு வெளியானது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 1.17 லட்சம் மாணவர்களும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1.13 லட்சம் மாணவர்களும், ராஜஸ்தானில் 82,548 மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அனைத்து இந்திய ரேங்கில் தமிழகத்தைப் பொறுத்தவரை திரிதேவ் வினாயகா 705 மதிப்பெண்களுடன் 30-வது இடத்தைப் பிடித்தார். இவரின் சதவீத மதிப்பெண் 99.99. அனைத்து இந்திய ரேங்கில் தமிழகத்தின் எம். ஹரினி 702 மதிப்பெண்களுடன் 43-வது இடத்தைப் பெற்றார். இவரின் சதவீதம் 99.9975.
தமிழகத்தில் மொத்தம் நீட் தேர்வுக்கு ஒருலட்சத்து 42 ஆயிரத்து 894 பேர் பதிவு செய்திருந்தனர், இதில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 67ஆயிர்த்து 787 பேர் தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டில் தமிழில் தேர்வு எழுத 1,017 பேர் விண்ணப்பித்த நிலையில் 2022ம் ஆண்டு 31 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.
டாப்-10 பட்டியலினத்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.பிரதாப் 686 மதிப்பெண்களுடன் அனைத்து இந்திய ரேங்கில் 434 வது இடத்தைப் பிடித்துள்ளார். ஏ.சுப்பிரமணியன் 615 மதிப்பெண்களுடன் அனைத்து இந்திய ரேங்கில் 14,800 இடத்தையும், மாற்றுத்திறனாளிகளில் டாப்-10 இடத்தையும் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 57.43 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தநிலையில் இந்த ஆண்டு 51.28% தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 99,610 பேர் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர்.
இந்த ஆண்டு 1,42,894 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 31 ஆயிரத்து 965 மாணவர்கள் தமிழ்வழியில் தேர்வு எழுதினார்கள்.