தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்..! நீட் தேர்வில் தோல்வி..! திருவள்ளூர் மாவட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை

By Ajmal Khan  |  First Published Sep 8, 2022, 8:12 AM IST

நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த விரக்தியில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  
 


நீட் தேர்வு முடிவு வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து இந்த நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர். இதனையடுத்து இந்த தேர்வு முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் தமிழகத்தில் இருந்து  1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். அதில் தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் - 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடமும், ஹரிணி - 702 மதிப்பெண் - 2வது இடமும் பிடித்துள்ளார். நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தன்ஷிகா தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த திரிதேவ் விநாயகா 30-வது இடமும், ஹரிணி 43-வது இடமும் பிடித்துள்ளனர். இந்த தேர்வில் உத்தரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவு வெளியானது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

அம்பத்தூர் மாணவி தற்கொலை

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 50% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் தேர்வு முடிவை ஆர்வமோடு எதிர்பார்த்த மாணவி ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி நீட் தேர்வு எழுதியிருந்துள்ளார். நேற்றிரவு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் மாணவி தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியை மீட்ட பெற்றோர் சென்னை கேம்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். மாணவியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே  உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியங்கள்
neet 2022 ug: tanishka: நீட் தேர்வு முடிவுகள்:தமிழகம் எப்படி? ராஜஸ்தான் மாணவி முதலிடம்: 9.93 லட்சம் பேர் பாஸ்

click me!