ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடும் ஷிஹான் ஹுசைனி.! ஓடோடி சென்று உதவிய தமிழக அரசு

Published : Mar 16, 2025, 01:33 PM IST
ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடும் ஷிஹான் ஹுசைனி.! ஓடோடி சென்று உதவிய தமிழக அரசு

சுருக்கம்

நடிகர் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சம் உதவி வழங்கியுள்ளது.

Shihan Hussaini Tamil Nadu government aid : நடிகரும், வில் வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, இவர் திரைப்படங்களில் வில்லனாகவும், நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராகவும் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சோதனை செய்த போது ரத்தப்புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தினமும் இரண்டு பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது. 

ரத்த புற்றுநோயால் பாதிப்பு

இந்த நிலையில் தமிழக அரசுக்கு ஷிஹான் ஹுசைனி கோரிக்கை வைத்திருந்தார். அதன் படி, தன்னுடைய கடைசி ஆசையாக உதயநிதி ஸ்டாலின் வில்வித்தை வீரர்களுக்காக மைதானம் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷிஹான் ஹுசைனிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் டாக்டர் ஷிஹான் ஹுசைனிக்கு  மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி டாக்டர் ஷிஹான் ஹுசைனி  இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்கு பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர்வ் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார். 

தமிழக அரசு 5 லட்சம் நிதி உதவி

இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5.00 இலட் சத்திற்கான காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!