தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ஆக அதிகரித்த எந்த திட்டமும் இல்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற வதந்திகளை பரபரப்ப வேண்டாம் என கூறியுள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது
தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் உதவி தொகை, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு மாதம் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்தநிலையில் தமிழக அரசு துறையில் பணியாற்றும் 40% பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
உண்மையா.? வதந்தியா.?
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15 தினங்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளத்திலும், அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவான தமிழ்நாடு பேக்ட் செக் வெளியிட்டுள்ள தகவலில், இதுவும் முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளது.
உண்மை கண்டறியும் குழு தகவல் என்ன.?
அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மாணமும் நிறைவேற்றவில்லை என கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக எந்த வித ஆலோசனையும் நடைபெறவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வதந்திகளை பரபரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போவதாகப் பரவும் வதந்தி! pic.twitter.com/wDARAGPSmI
— TN Fact Check (@tn_factcheck)