தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. அசத்தல் அறிவிப்பு.. விரைவில் வெளியாக வாய்ப்பு !!

Published : Feb 07, 2022, 07:28 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. அசத்தல் அறிவிப்பு.. விரைவில் வெளியாக வாய்ப்பு !!

சுருக்கம்

தமிழக அரசு ஊழியர்கள் அரசுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அகவிலைப்படி 01/01/2022 முதல் 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை, கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக கூட்டுறவு சங்கம் மூலமாக நடத்தப்பட்டு வரும் ரேஷன் விலை கடை சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். 

அந்த மனுவில் இருப்பதாவது, ‘ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதும், ரேஷன் கடை ஊழியர்கள் புதிய ஊதிய உயர்வு பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு மூலமாக புதிய ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டபோது 114 சதவீதம் அகவிலைப்படியை 100 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் இணைத்துவிட்டு, மீதம் 14 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கலாம் என குறிப்பிடப்பட்டது.

 அதன்பின் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெறும்போது கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்கலாம் என்பது விடுபட்டு விட்டது. அதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படியை தற்போது தமிழக அரசு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. 

இதனிடையில் அதிமுக அரசு செய்த குழப்பத்தினை சுட்டிக்காட்டி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு இன்று வரை அகவிலைப்படிக்கான அறிவிப்பு, கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகவே ரேஷன் ஊழியர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டும், கடும் பணி நிலைமையை அணுகியும், அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் விரைவில் வழங்கிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
எம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை