Semester Exam Update: முக்கிய அப்டேட்..நேரடி முறையில் தான் தேர்வு.. அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்..

Published : Feb 06, 2022, 09:49 PM IST
Semester Exam Update: முக்கிய அப்டேட்..நேரடி முறையில் தான் தேர்வு.. அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்..

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக கொரோனா, ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

அரசு கலை கல்லூரி,பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரிகள்,பல்கலைகழகங்கள் என அனைத்திற்கும் ஆன்லைன் முறையிலே தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி மாதத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு தேர்வுகள் துவங்கும் எனவும் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு மட்டும் நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களை கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்பு நடைபெற்று வருகின்றன. இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி முறையில் தான் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஏற்கனவே 2 செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடந்ததால், 3-வது செமஸ்டர் நேரடி தேர்வு முறையில் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 4-வது செமஸ்டரில் எழுத்துத் தேர்வு இல்லை என்பதால் மூன்றாவது செமஸ்டரில் நேரடி தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!