மூட்டை மூட்டையாக பொய்களை அள்ளி வீசும் தளபதி.. விஜய் மீது பாயும் அவதூறு வழக்கு..? தீவிரம் காட்டும் அரசு

Published : Sep 22, 2025, 03:23 PM IST
TVK Vijay

சுருக்கம்

தனது பிரசாரத்தின் போது அடுக்கடுக்கான பொய் தகவல்களைப் பரப்பி வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது அவதூறு வழக்கு தொடரும் வகையில் தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமைகள் தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் வீதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். தற்போது வரை பிரசாரம் மேற்கொண்ட மாவட்டங்களில் விஜய்க்கு கூடிய கூட்டமானது தமிழகத்தில் பல முக்கிய கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் பிரசாரத்திற்கு அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் விஜய்யின் பிரசாரத்திற்கு வரும் கூட்டம் குறைந்ததாக இல்லை. அடுத்தடுத்த மாவட்டங்களில் லாட்சங்களில் கூட்டம் குவிந்து வருகிறது. ஆனால் விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது. மேலும் அந்த கூட்டம் விஜய்யின் பேச்சை கேட்க வந்தவர்கள் இல்லை. மாறாக விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்த கூட்டம் வருகிறது என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படி நாகை மாவட்டத்தில் அலையத்தி காடுகளை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க போதிய மருத்துவர்கள் இல்லை. நாகையில் மரைன் கல்லூரி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனிடையே விஜய்யின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபித்துள்ள தமிழக அரசு அலையத்தி காடுகள் தற்போது இரு மடங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மீனவ கல்லூரி செயல்படுகிறது. நாகையில் போதிய மருத்துவர்கள் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் பொய் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, விஜய்க்கு எதிராக அவதூறு வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!