பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

By Manikanda Prabu  |  First Published Apr 23, 2024, 10:35 AM IST

பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


தமிழ்நாட்டு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, பிளஸ் 1 மற்றும், 10ஆம் வகுப்புகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அதேசமயம், ஒன்று முதல் 9ஆம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. இதனிடையே, ரம்ஜான், தெலுங்கு வருடபிறப்பு, ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி, மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகியவற்றுக்காக பள்ளிகள் அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டன.

Latest Videos

undefined

இந்த நிலையில், அடுத்தடுத்த விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதால், ஏப்ரல் 24ஆம் தேதி (நாளை) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படவுள்ளது.

ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி ரூ.36,000 அபேஸ்: பாஜக வேட்பாளர் பேரணியில் திருடர்கள் கைவரிசை!

அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால், பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பள்ளிகளுக்கு மேலும் ஒருவாரம் விடுமுறை விடப்படும் என தெரிகிறது. அதேசமயம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!