தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது பற்றி ஜூன் 19, 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் எழுதிய கடிதங்ககளுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பதில் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படுவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
ஜூன் 19, 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் எழுதிய கடிதங்ககளுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பதில் எழுதியுள்ளார். அதில், "ஜூன் 26ஆம் தேதியின் விவரங்களின்படி, 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சியின் கனிமவள கொள்ளை... வேடிக்கை பார்க்கும் மு.க.ஸ்டாலின்...: அண்ணாமலை குற்றச்சாட்டு
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
"மீனவர் பிரச்சனை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த 10 ஆண்டுகளாக மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்" எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
என்னைப் பேச அனுமதித்து இருந்தால் கிழிகிழின்னு கிழித்திருப்பேன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்