
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தொடர்ச்சியாக செய்துவருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் பலமுறை கடுமையான கண்டங்கள் எழுந்தபோது மத்திய அரசு இந்தப் பிரச்சினை மீது கவனம் செலுத்தாமல் இருந்துவருகிறது.
இந்தச் சூழலில், காரைக்கால், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோடியக்கரையின் தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை இவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.
இலங்கைக் கடற்படையினர் படகில் இருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை கடலில் தள்ளிவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் 4 தமிழக மீனவர்களை மோசமாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தும் வலைகள், ஜிபிஎஸ் கருவி போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தில் படுகாயங்களுடன் தப்பி வந்த 3 மீனவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களிடம் இலங்கை கடற்படை தாக்கியது பற்றி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர். இலங்கை கடற்படையின் தொடர் வன்முறை செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுதம் என்று தமிழக மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Priyanka Gandhi: பிரியங்காவுக்கு 6000 டன் ரோஜா இதழ்களால் ரோஸ் கார்பெட் வரவேற்பு!