தமிழக மீனவர்கள் கைதுக்கு முடிவு இல்லையா..? தொடர்ந்து 2 வாரங்களில் 44 பேர் கைது.. ராமதாஸ் கோரிக்கை..

Published : Feb 13, 2022, 03:39 PM IST
தமிழக மீனவர்கள் கைதுக்கு முடிவு இல்லையா..? தொடர்ந்து 2 வாரங்களில் 44 பேர் கைது.. ராமதாஸ் கோரிக்கை..

சுருக்கம்

தமிழக மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவுவே இல்லையா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.

கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று தான் மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்த சூழலில், ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

ஜனவரி 31-ஆம் தேதி 21 பேர், பிப்ரவரி 8-ஆம் தேதி 11 பேர், இன்று 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது.

இன்று கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!